2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்களுக்கு நீதிமன்றம் மூலம் தடைவிதிக்கப்படும்: சமன் சிகேரா

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                    (எஸ்.கே.பிரசாத்)
மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக எமக்கு தகவல்கிடைத்தால் அந்த ஆர்பாட்டங்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக தடையுதத்தரவு பிறப்பிக்கப்படும் என்று யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா தெரிவித்துள்ளார்.

இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வீதிப்போக்குவரத்தை மறித்து மக்கள் விடுதலை முண்னணியினரால் ஆர்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு போக்குவரத்து ஒழங்குகளை மாற்றி ஆர்ப்பாட்டத்திற்கு எந்தவிதமான இடையூகளும் இன்றி பொலிஸார் வீதி ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தனா என அவர் தெரிவித்தார்.

இதன்போது, தமிழ் கட்சிகள் ஆர்பாட்டம் நடத்தினால் அதனை ஏன் தடை செய்யவேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏன் பொலிஸார் தடை செய்யவில்லை என்று ஊடகவியலாளர்களினால் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமன் சிகேரா, மக்கள் விடுதலை முண்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் முன் அனுமதிபெற்று தென்னிலங்கையில் இருந்து பல நகரங்களை கடந்து யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். இந்த ஆர்ப்பாட்த்தில்  கலந்துகொள்வதற்காக வருகை தந்தவர்களின் வாகனத் தொடரணி  எவருக்கும்  பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்ததுடன் குறிப்பிட்ட நேரம் நடைபெற்ற ஆர்பாட்டம் என்பதால் வீதி ஒழுங்குகள் மாற்றம் செய்யப்பட்டது எனவும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X