2025 மே 20, செவ்வாய்க்கிழமை

காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தர்களுக்கு அபராதம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                             (ரஜனி)
காலவதியான பொருட்கள் விற்பனை,  நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்குள்ளான 14 வர்த்தகர்களுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் 60 ஆயிரம் ரூபா அபராதம் விதித்துள்ளது.

யாழ். நகரப் பகுதியில் பாவணையாளர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்பின் காலாவதியான பொருட்கள், மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்தல், விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாதவர்கள் என  18 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவர்களில் 14 பேர் இன்று  யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களில் காலாவதியான பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு  தலா 6 ஆயிரம் ரூபா அபராதம், நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாவும், விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத வர்த்தகர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாவும்  அபராதமாக விதிக்கப்பட்டது.

அதேவேளை, நீதிமன்றிற்கு சமுகமளிக்காத 4 வர்த்தகர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாவணையாளர் அதிகார சபையின் யாழ். மாவட்ட அதிகாரி என்.சிவசீலன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X