2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ், கிளிநொச்சியில் சிறுவர் மகளிர் விவகார பிரிவுகளை விரிவுபடுத்த நடவடிக்கை: டி.ஐ.ஜி

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரங்களுக்கான பிரிவுகளை விரிவு படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் டி.ஐ.ஜி எரிக்பெரேரா தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பெண்கள் சிறுவர் விவகாரங்களுக்கான பிரிவு சரியான முறையில் செயற்படவில்லை என்று முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் குற்றம் சாட்டியிருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

தற்போது பொலிஸ் நிலையங்களில் பெண்கள் சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கூடிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் கிளிநொச்சியில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்காக பொலிஸ் மக்கள் தொடர்பகம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வன்னிப்பகுதியில் கள்ளநோட்டின் பாவனை அதிகரித்துள்ளதாகவும் கடந்த ஒரு வாரகாலத்தில் மட்டும் கள்ள நோட்டு வைத்திருந்த மூன்று நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் 5000 ரூபா கள்ள நோட்டு வைத்திருந்த நபர் ஒருவரும் பூனகரி பகுதியில் 1000 ரூபா கள்ள நோட்டு வைத்திருந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வவுனியா ஓமந்தைப் பகுதியில் மிகச்சாதுரியமான முறையில் 10000 ரூபா கள்ள நோட்டை மாற்ற முற்பட்ட நபர் ஒருவர் பொலிஸாhரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 29 ஆம் திகதி 5000 ரூபா கள்ள நோட்டினை பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியதாகவும் மீண்டும் கடந்த 9 ஆம் திகதி கள்ள நோட்டை பயன்படுத்தி எரிபொருள் நிரப்ப முற்பட்டவேளை இவர் கைது செய்யப்பட்டதாக எரிக்பெரேரா தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X