2025 மே 20, செவ்வாய்க்கிழமை

யாழ்.போதனா வைத்தியசாலை ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கணக்காய்வு திணைக்களம் விசாரணை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                    (ரஜனி)
யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் சம்பவங்கள் தொடர்பாக கணக்காய்வு திணைக்களம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும் மேலதிக பணிப்பாளருமாகிய எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

கடந்த 2 நாட்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட அரச கணக்காய்வு திணைக்கள அதிகாரிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச நிதி உதவிகள் மற்றும் முன்னைய பதிவுகள், ஆவணங்கள் என்பவற்றினை பரிசீலனை மேற்கொண்டுள்ளனர்

கடந்த காலத்தில் அரசினால் வழங்கப்பட்ட சொத்துக்களின் கணக்கு விபரங்கள் மற்றும் நிதி உதவிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகளினால் வழங்கப்பட்ட நிதி உதவிகள் தொடர்பான ஆவணங்களை திரட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வைத்தியசாலை ஊழியர்களிடம் எந்த விதமான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

விசாரணைகள் தொடர்பான அறிக்கைகளை அரச கணக்காய்வு திணைக்களம் தன்னிடம் தரவில்லை எனவும் யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X