2025 மே 20, செவ்வாய்க்கிழமை

குடிசை கைத்தொழிலாளர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் கூட்டம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் குடிசை கைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கான வங்கிக் கடன் வழங்கல் தொடர்பான கூட்டம் இன்று திங்கட்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தலைமையில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் குடிசைக்கைத்தொழில் கண்காட்சி மூலம் யாழ்.மாவட்டத்தில தெரிவு செய்யப்பட்ட 1000 குடிசைக்கைத் தொழிலாளர்ளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்;தும் நோக்கில் குடிசைக் கைத்தொழிலை எவ்வாறு மேம்படுத்தலாம், அதற்கு தேவையான வழிமுறைகள், தேவையான நிதிப்பயன்பாடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இவர்களின் வாழவாதரத்தை உயர்த்துவதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும்; சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 10000 ரூபாவும் நாட்டில் உள்ள 31 வங்கிகள் ஊடாக இலகுகடன் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சம்மந்தப்பட்ட வங்கியாளர்கள் வருகை தந்து கடன்பெறுவதற்கு விண்ணப்பித்த பயனாளிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி, ஆளுனரின் செயலாளர் இளங்கோவன், மேலதிக அரச அதிபர் ரூபினி வரதலிங்கம், யாழ்.மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி மோகணேஸ்வரன் மற்றும் யாழ்.மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் உத்தியோகஸ்தர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X