2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றம்

Super User   / 2012 டிசெம்பர் 11 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். மாநகர சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வருவாய் 752.7 மில்லியன் ரூபாவை எட்டியுள்ளது என மேயர் யோகேஸ்வரி பற்குணராஜ சபையில் அறிவித்தார்.

யாழ். மாநகர சபையின் 2013ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நேற்று திங்கட்கிழமை யாழ். மேயரினால் சமர்ப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வரவு செலவு திட்ட விவாதம் இடம்பெற்றது. இதன் பின்னர் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது 12 வாக்குகள் ஆதரவாகவும் 08 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. மேலதிக நான்கு வாக்குகளினால் 2013ஆம் ஆண்டிற்கான யாழ். மாநகர சபையின் வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதன்போது, மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் மு.ரொமீடியஸ் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X