2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

லலித், குகன் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 13 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(த.சுமித்தி)

கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் லலித் மற்றும் குகன் ஆகிய இருவரின் வழக்கு விசாரணைகளை 2013 ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்கு யாழ். நீதிவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிரான குற்றப்பிரேரணையை கண்டித்து யாழ். நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டு வருவதனால் நீதிமன்ற செயற்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

இந்நிலையில், மேற்படி வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரச மற்றும் முறைப்பாட்டாளர்களின் சட்டத்தரணிகள் மன்றில் சமூகமளிக்காத காரணத்தினால் யாழ். நீதிமன்ற நீதிபதி க.சிவகுமார் இவ்வழக்கினை ஒத்திவைத்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X