2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தையல் பயிற்சி மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கிரிசன்)

உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள தபவீ தொழில் பயிற்சி நிலையத்தில் கணினி மற்றும் தையல் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறிய மாணவிகளுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு மருதனார்மடத்தில் அமைந்துள்ள துபவீ பயிற்சி மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில், வலி தெற்க உடுவில் பிரதேச சபைத் தலைவர் தி.பிரகாஸ்;, திருமதி த.தயாசோமசுந்தரம், உடுவில் பிரதேச செயலக மனிதவலு ஆற்றல் அலுவலர் ஈ.ரஞ்சித்ராஜ், சிறப்பு விருந்தினராக உடுவில் பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவர் நா.நவரத்தினராசா, அருட் தந்தை ரி.இராஜ்குமார், தொழிற்பயிற்சி அதிகார சபையின் கணக்காளர் எஸ்.சுரேஸ்குமார் கலந்துகொண்டனர்.

இதன்போது, தையல் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 21 மாணவிகளும் அளவெட்டியில் இடம்பெற்ற கணினிப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த 16 மாணவிகளும் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டார்கள். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X