2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

யாழில் முதியவரின் சடலம் மீட்பு

Super User   / 2013 ஜனவரி 08 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி

யாழ். நல்லூர் குறுக்கு வீதியில் உள்ள கிணறிலிருந்து முதியவரின் சடலம் இன்று யாழ். பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
நல்லூர் செட்டித் தெரு பகுதியை சேர்ந்த 71 வயதான கணபதிப்பிள்ளை ஜெகசோதி என்பவரே மீட்கப்பட்டவார்.

குறித்த முதியவர் நல்லூர் குறுக்கு வீதியில் உள்ள தமது காணியினை தினமும் வந்து பார்ப்பதாகவும், அதேபோன்று நேற்று மாலை காணியை பார்க்க வந்தவரை காணவில்லை என்று பிள்ளைகள் தேடியபோது சடலமாக மீட்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

 சம்பவ இடத்திற்கு வந்த யாழ். நீதிமன்ற பதில் நீதிவான் திருநாவுக்கரசு சடலத்தின் அருகில் நஞ்சு போத்தல் இருப்பதனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சடலத்தினை, பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு யாழ். பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X