2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யூனியன்குளம் பாலம் சேதம்; போக்குவரத்து பாதிப்பு

Menaka Mookandi   / 2013 ஜனவரி 11 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம் உடைப்பெடுத்து பாய்வதால் கோணாவில் பிரதேசத்திற்கும்  யூனியன்குளம் கிராமத்திற்கும் இடையிலான பிரதான வீதியில் உள்ள பாலம் உடைந்துள்ளமையால் அக்கிராமத்திற்கான போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த யூனியன் குளம் கிராமத்தில் 66 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் மக்களுக்கும் ஏனைய பிரதேசத்திற்குச் செல்லும் பிரதான வீதியில் உள்ள பாலம் உடைந்துள்ளதாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு நடைபயணமாகச் சென்று தங்கள் தேவைகளைப் பெறவேண்டிய நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக பாடசாலை மற்றும் மருத்துவமனைக்கு  செல்வதற்கு அங்குள்ள மக்கள் இவ்வீதியையே பயன்படுத்தி வந்துள்ளனர்.  இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய கவனமெடுத்து இந்த வீதியை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .