2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

புலிகளின் மாவட்ட தலைவர் எனக்கூறி கப்பம் பெற்றவர் கைது

Kanagaraj   / 2013 மே 17 , பி.ப. 08:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

விடுதலைப்புலிகளின் யாழ். மாவட்ட தலைவர் எனக்கூறி சுமார் 12 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற்ற பிரதான நபரை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ. டபிள்யு. எல். விக்கிரமராச்சி  இன்று தெரிவித்தார்.

கிளிநொச்சி பரந்தன் சந்தி பகுதியில் கடந்த 3 ஆம் திகதி யாழ். பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் திருநகர் மேற்கு கிளிநொச்சி மற்றும் குருக்கள் வீதி கோப்பாய் பகுதியைச் சேர்ந்;தவர்களாவர்.
இருவரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் 3 மாத கால தடுத்து காவலில் வைக்கப்பட்டு, பொலிஸ் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

இந்த விசாரணையின் பின்னரே முகமாலைப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை இன்று கைதுசெய்துளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெயய்ப்பட்ட இவர் யாழ். மாவட்ட சுகாதார திணைக்களத்தில் சாரதியாக கடமையாற்றி வருகின்றார். முன்னர் கைதுசெய்யப்பட்ட இருவருடன் இணைந்து, வியாபார நிலையங்களில் கப்பம் பெறுவதற்கு முழு உதவிகளையும் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேகநபர் யாழ். சுகாதார திணைக்களத்தில் கடமையை முடித்துக்கொண்டு வெளியே வந்த வேளை, யாழ். போதனா வைத்தியசாலையின் முன்பாக வைத்து இன்று கைதுசெய்ததாகவும்;, கைதுசெய்யப்பட்டுள்ள இவரை யாழ். நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாழ். சிறு குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.



  Comments - 0

  • IBNU ABOO. Saturday, 18 May 2013 05:15 AM

    புலிகளை நம்பி இன்னும் எத்தனைபேர் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்... பாவம்...!!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X