2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பாக். உயர் ஸ்தானிகர் யாழ். விஜயம்

Super User   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}



-சுமித்தி தங்கராசா


இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரொஷி  முதற் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார்.வட மாகாண சபை தேர்தல் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காகவே அவர் அங்கு விஜயம் செய்துள்ளார்.

இதன்போது யாழ். வணிகர் கழக தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளருமான ஆர் ஜெய்சேகரத்தை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, தேர்தல், அரசியல் மற்றும் முதலீடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து யாழ்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு உயர் ஸ்தானிகர் விஜயம் மேற்கொண்டார். கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடக பொறுப்பாளர் தாவூத் இஹ்திசாமும் உயர் ஸ்தானிகருடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X