2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

மாகாண சபை தேர்தலில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு

Super User   / 2013 செப்டெம்பர் 17 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா 

மாகாண சபை தேர்தலில் கடமையாற்றவுள்ள அதிகாரிகளுக்கு கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனால் தேர்தலில் கடமையாற்றும் கிராம அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கான தேர்தல் கொடுப்பனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. கொடுப்பனவுகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம அலுவலர்கள் முன்னர் கொடுப்பனவாகவிருந்த 1,000 ரூபா தற்போது 1,250 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிராம அலுவலர்களின் உதவியாளர்களுக்கான கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X