2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆவரங்கால் வடக்கு ப.நோ.கூ.சங்கக் கடையில் திருட்டு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ். ஆவரங்கால் வடக்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கக் கடையின் பூட்டினை உடைத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றது.

பருத்தித்துறை ஆவரங்கால்  பிரதான வீதியில் அமைந்துள்ள  இந்தக் கூட்டுறவுச்சங்கக் கடையின்  நுழைவாயில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற திருடர்கள், பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .