2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

சத்தியப்பிரமாணத்திற்கு முன்னர் அமைச்சர்கள் பெயர் விபரம் வெளியிடப்படும்: சுரேஷ்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 08 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

வடமாகாண சபை அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வுக்கு முன்னர் அமைச்சர்கள் யார் யார் என்பது பற்றி உறுதியான விபரம் வெளியிடப்படுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று தெரிவித்தார்.

வடமாகாண சபை அமைச்சர்கள் விபரங்கள் தொடர்பாக சுரேஷ் பிரமேச்சந்திரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்களின் தெரிவுகள் தொடர்பாக தனக்கு இதுவரையிலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் தெரியவில்லையெனவும், சில பத்திரிகைகள் இது தொடர்பாக தன்னிச்சையான செய்திகளை பிரசுரிப்பதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) அமைச்சர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்களின் விபரங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .