2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

திவிநெகும திட்டத்தில் மரக்கன்றுகள் விதைகள் வழங்கப்படவுள்ளன

Kogilavani   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 07:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

திவிநெகும திட்டத்தின் கீழ் 5ஆம் கட்டமாக பழமரக் கன்றுகள் மற்றும் விதைகள் வழங்கும் நிகழ்வுகள் பிரதேச செயலகங்கள் ரீதியாக நடைபெறவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) பிரதேச செயலகங்கள் ர்Pதியாக நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் இரசாயனப் பசளைகளற்ற தரமான உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும், நாட்டின் பொருளாதார அபிவிருத்தியினை மேம்படுத்துவதற்காகவும் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

ஒவ்வொரு கிராம அலுவலர்கள் பிரிவிலும் நூறு குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு இவ்விதைகள் வழங்கப்படவுள்ளன.
பலா, கொய்யா, மா, இலுப்பை, பப்பாசி, நெல்லி, ஜம்பு, அம்புறுல்லா, ஈரப்பலா, கறி முருங்கை, தோடை, தேசி, விளாத்தி, மாதுளை, பெஷன் புறுட் ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .