2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஐங்கரநேசன் தொடர்பில் மாவைக்கு கடிதம்: சுரேஷ்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஐங்கரநேசனுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப்பதவியானது எமது கட்சிக்காக வழங்கப்பட்ட அமைச்சாக கருதக்கூடாது என தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
 
“எமது கட்சியின் கோட்பாடுகளை மதிக்காமல் செயற்பட்டது மட்டுமல்லாமல், எமது கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்ற தோரணையில் அறிக்கையினையும் ஐங்கரநேசன் விட்டிருந்தார். இதனடிப்படையில் ஐங்கரநேசனுக்கும் எமது கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென அவரே ஒத்துக்கொண்டுள்ளார். ஆகையினால், அவருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியானது ஈ.பி.ஆர்.எல்.எப். இற்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியாக கருதக்கூடாது என மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்..” என சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .