2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; மூவர் காயம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்ததுடன், மூவர் காயமடைந்தனர். 

2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது.

கொழும்புத்துறை வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒழுங்கை ஒன்றினுள் திரும்ப முற்பட்டபோது,  எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்புத்துறை விபுலானந்தர் வீதியைச்  சேர்ந்த ஜோசப் பத்மநாதன் (வயது 59) என்பவரே இந்த விபத்தில் மரணமடைந்தார்.

நேற்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு இடம்பெற்ற  இந்த விபத்தில் காயமடைந்த மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில்; அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் மரணமடைந்தவரின் மனைவி படுகாயமடைந்ததுடன், எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவர்களில் ஒருவரும் மற்றும் வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரும் காயமடைந்தனர்.

இந்த விபத்து  தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .