2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொதுநலவாய மாநாட்டை முன்னிட்டு ஊர்திப் பவனி யாழிலிலிருந்து ஆரம்பம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

பொதுநலவாய மாநாடு நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளதை வரவேற்கும் முகமாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கிய ஊர்திப் பவனி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை   ஆரம்பமாகியுள்ளது.

தேசிய தொலைக்காட்சியொன்றின் அனுசரணையில் யாழ். நல்லூர் கந்தசுவாமி கோவிலிலிருந்து சர்வமத ஆசீர்வாதத்துடன் ஆரம்ப  நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த ஊர்திப் பவனி  எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பைச்  சென்றடையவுள்ளது.

இந்த நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின், யாழ். மாவட்டக் கட்டளைத்; தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, மேலதிக அரசாங்க அதிபர் ரூபினி வரதலிங்கம், ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம், சர்வமத குருமார்கள்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .