2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழ்.நூலகத்தின் கணினிகள் சோதனை: ஆணையாளர் மறுப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 19 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்.பொதுநூலகத்தின் கணினிப் பிரிவின் கணினிகள் திங்கட்கிழமை (18) காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 1 மணி வரையிலும் சோதனையிடப்பட்டுள்ளது.

எனினும் இதனை மறுத்த யாழ்.மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் கணினிகளுக்கு கடவுச்சொல் போடுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

நூலகத்தின் கணினிப் பகுதிக்குச் சென்ற இராணுவ புலனாய்வாளர்கள் என்று அடையாளப்படுத்தியவர்கள், நூலகரின் அனுமதியினைப் பெறாமல் நூலகத்தின் கணினிப் பிரிவிலிருந்த கணினிகளை சோதனையிட்டுள்ளனர். இதன்போது அங்கு யாழ்.மாநரக சபை ஆணையாளரும் இருந்திருந்தார்.

எனவே இது தொடர்பாக மாநகர ஆணையாளரினைத் தொடர்புகொண்டு கேட்டபொழுது, அவ்வளவு நேரமும் கணினிகளின் கடவுச்சொல் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதே தவிர சோதனை நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லையெனத் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .