2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

யாழில் விபத்து; இராணுவச் சிப்பாய்கள் உட்பட மூவர் காயம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 20 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}



-செல்வநாயகம் கபிலன், சுமித்தி தங்கராசா


யாழ். கோப்பாய்ச் சந்தியில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் இராணுவச் சிப்பாய்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இன்று புதன்கிழமை  காலை 09 மணியளவில் இராணுவத்தினரின்  வண்டியும் தனியார் பஸ் வண்டியும் மோதி விபத்திற்குள்ளானது.

அச்சுவேலியிலிருந்து யாழ். நகர் நோக்கிச்  சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் வண்டியும் உரும்பிராயிலிருந்து கோப்பாய் நோக்கிச் சென்றுகொண்டிருந்த இராணுவத்தினரின்  வண்டியுமே மோதி விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்து இடம்பெற்றுள்ள இடத்திலிருந்த வியாபார நிலையமொன்றும் இதன்போது சேதமடைந்துள்ளது.

காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .