2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொன்னகர் கிராமத்திற்கு சமூக பொருளாதார அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 20 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பொன்னகர் கிராமத்தில் வசிக்கும் 50 குடும்பங்களின் வாழ்வாதார நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் 'சமூக பொருளாதார அபிவிருத்தித் திட்டம்';  நேற்று செவ்வாய்க்கிழமை (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச நிறுவனத்தினால் (ஐழுஆ) ஆரம்பிக்கப்பட்ட இந்த அபிவிருத்தித் திட்டத்தில் சுழற்சி முறையிலான கடன் வழங்கல், பொதுக்கிணறு, சூரிய மின்சக்தியில் இயங்கும் நீர்ப்பம்பி போன்ற அபிவிருத்திச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .