2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இருவேறு விபத்துக்களில் இருவர் காயம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 21 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ்ப்பாணத்திலுள்ள இருவேறு இடங்களில்  இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ். முட்டாஸ் கடைச் சந்தியிலும்  யாழ். நகர் ஆஸ்பத்திரி வீதியிலும் நேற்று புதன்கிழமை மேற்படி விபத்துக்கள் இடம்பெற்றன.

யாழ். முட்டாஸ் கடைச் சந்தியில் ஹன்டர் ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும்  மோதி விபத்திற்குள்ளானது,

இதில் கொய்யாத்தோட்டப் பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை திருச்செல்வம் (வயது 49) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

யாழ். நகர் ஆஸ்பத்திரி வீதியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் உடுவில் பகுதியைச் சேர்ந்த யோகலிங்கம் தருமநாதன் (வயது 55) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி விபத்துக்களில் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளை  யாழ். போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .