2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உடுவிலுள்ள வீடொன்றில் திருட்டு

Suganthini Ratnam   / 2014 மார்ச் 18 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ். உடுவில் வடக்கு பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 25,000 ரூபா பெறுமதியான பொருட்கள் களவு போயுள்ளதென்று  அவ்வீட்டு உரிமையாளர் திங்கட்கிழமை  (17) முறைப்பாடு செய்ததாக சுன்னாகம் பொலிஸார்  தெரிவித்தனர்.

இவ்வீட்டிலுள்ளவர்கள் உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையிலேயே இக்களவு இடம்பெற்றது.  வீட்டுக் கூரையை பிரித்து உள்நுழைந்தவர்கள்   அங்கிருந்த கையடக்கத் தொலைபேசி, கமெரா உள்ளிட்ட பொருட்களை களவு எடுத்துக்கொண்டு சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இக்களவு தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .