2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஆலயத்திருவிழாவில் கைகலப்பு: ஒருவர் காயம்

Kogilavani   / 2014 மே 01 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வல்வெட்டித்துறை வேம்படி அம்மன் ஆலயத் திருவிழாவின் போது இரு குழுக்களுக்கிடையில்இடம்பெற்ற கைகலப்பில் ஒருவர் காயமடைந்து ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார்   புதன்கிழமை (30) இரவு தெரிவித்தனர்.

அதேயிடத்தினைச் சேர்ந்த ரி.மயூரன் (18) என்பவரே காயமடைந்தார்.

ஆலயத்திருவிழாவில் மின்குமிழ்கள் பொருத்துவது தொடர்பில் எழுந்த முரண்பாடே இந்தக் கைகலப்பிற்குக் காரணம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .