2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கரவெட்டி வைத்தியசாலைக்கு உபகரணங்கள்

Super User   / 2014 மே 11 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


சம்பத் வங்கியின் நெல்லியடிக் கிளையினால் கரவெட்டி வைத்தியசாலைக்கு 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) வழங்கப்பட்டன.

இந்த உபகரணங்களில் வெளிநோயாளர் பிரிவிற்கு வரும் தாய்மார்கள் பாலூட்டுவதற்கு வசதியான பாலூட்டும் அறை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தொடர்ந்து வைத்தியசாலை வளாகத்தில் மரங்களும் நடுகை செய்யப்பட்டன.

இந்நிகழ்வில் யாழ்.பிராந்திய சுகாதார வைத்தியதிகாரி ஆர்.கேதீஸ்வரன், சம்பத் வங்கி முகாமையாளர், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .