2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

திருடப்பட்ட குத்துவிளக்குகள் பற்றைக்குள் இருந்து மீட்பு

Kogilavani   / 2014 மே 12 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா 

யாழ்.சுன்னாகம் ஐயனார் ஆலயத்திலிருந்து கடந்த வாரம் திருடப்பட்ட குத்துவிளக்குகளின் ஒரு பகுதி  கோவிலின் அருகிலிருந்த தாழம் பற்றைக்குள் இருந்து சனிக்கிழமை (10) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் திங்கட்கிழமை (12) தெரிவித்தனர்.

மேற்படி ஆலயத்தில் கடந்த வாரம் இரண்டு தடவைகள் திருட்டு நடவடிக்கைகள் இ;டம்பெற்றதுடன், அத்திருட்டுக்களின் குத்துவிளக்குகள் உள்ளிட்ட பித்தளைப் பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஆலயத்திற்கு வந்த அடியவர்கள் ஆலயத்தின் பின்புறத்திலுள்ள பற்றைக்குள் இருந்து களவாடப்பட்ட குத்துவிளக்கின் மேல் மற்றும் அடிப்பகுதிகளையும் கண்டெடுத்துள்ளனர்.

இதேவேளை, மேற்படி ஆலயத்தின் அருகிலுள்ள சந்திரசேகரப் பிள்ளையார் ஆலயத்திலும் இதேமாதிரியாக குத்துவிளக்குகள் கடந்த வாரத்தில் திருடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், கோயிலுடன் தொடர்புடையவர்களையும் சந்தேகத்திற்கிடமானவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .