2025 ஜூன் 30, திங்கட்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்தவர் கைது

Menaka Mookandi   / 2014 மே 16 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

முள்ளிவாய்க்கால் நினைவுதின துண்டுப்பிரசுரம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சுன்னாகம் வீதி, நிலாவரைப் பகுதியினைச் சேர்ந்த நபர் ஒருவர் இராணுவத்தினரால் நேற்று வியாழக்கிழமை (15) நள்ளிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தனக்கும் மேற்படி துண்டுப்பிரசுரத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையெனவும் யாரோ வீட்டிற்கு வந்து எறிந்துவிட்டுச் சென்றதினையே தான் எடுத்து வைத்திருந்ததாக குறித்த நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கைதான சந்தேகநபர், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X