2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

விழிப்புணர்வு செயலமர்வு

Kogilavani   / 2014 மே 22 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


- வி.தபேந்திரன்


வேள்ட் விஷன் நிதி அனுசரணையில் கிளிநொச்சி இரணைமடுவிலுள்ள சிவில் பாதுகாப்பு பண்ணையில் பணிபுரிபவர்களுக்கு 'சிறுவர் உரிமைகள் மற்றும் உளநலன்' தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு வியாழக்கிழமை (22) பண்ணையில் இடம்பெற்றது.

வேள்ட் விசன் திட்ட அதிகாரி ஏ.ஜேசுதாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட அதிகாரி இராஜரட்ணம் செந்தூரன், மாவட்ட உளவள அலுவலர் தேவராஜா துஷ்யந்தன், சிறுவர் நன்னடத்தை அலுவலர் ராமசாமி ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்கள்.

இதில் பண்ணையில் பணியாற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு கருத்துக்களைச் செவிமடுத்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .