2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பொலிஸாரை கண்டு திருடன் தப்பியோட்டம்

Kogilavani   / 2014 மே 25 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.ஆவரங்கால் சிவன் கோயிலின் கதவை உடைத்து அங்கிருந்த பொருட்களைத் திருடிச் சென்றவர் ரோந்தில் சென்ற பொலிஸாரைக் கண்டு  பொருட்களை கைவிட்டுவிட்டுத் தப்பியோடிய சம்பவம் சனிக்கிழமை (25) இரவு இடம்பெற்றதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, ஆலயத்திலிருந்து திருடப்பட்ட டி.வி.டி பிளேயர், அம்ப் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட துவிச்கக்கரவண்டி ஆகியவற்றினை மீட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தமது ஆலயம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக ஆவரங்கால் சிவன் ஆலய தர்மகத்தா சபையினர் ஞாயிற்றுக்கிழமை (25) காலை முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .