2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

நோயாளி ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு

Kanagaraj   / 2014 மே 27 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

கஷ்டபிரதேச பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு நியமனங்கள் வழங்கினால், தாங்கள் நோயாளிகள் எனக்கூறி தங்கள் வீட்டிற்கு அருகில் மாற்றலாகி வரும் ஆசிரியர்களை ஆசிரியர் பணியில் வைத்திருக்காதீர்கள் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (27) இரண்டாவது நாளாக இடம்பெற்று வருகின்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்வியற் கல்லூரி மற்றும் நுண்கலைப்பீடங்களிலிருந்து வெளியேறி ஆசிரியராகக் கடமையாற்றச் செல்பவர்களுக்கு 5 வருடங்கள் கஷ்டப்பிரதேசத்தில் கடமையாற்ற வேண்டும் என்று கூறியே நியமனக் கடிதங்கள் வழங்கப்படுகின்றன.

இருந்தும், அவர்கள் ஒரு சில வருடங்களிலே தாங்கள் நோயாளிகள் என்றும் அல்லது பிற காரணங்கள் கூறியும் மாற்றலாகி யாழ்ப்பாணத்திற்கு வருகின்றனர். திருமணமான பெண் தனது தாய் வீட்டிற்குப் பிரசவத்திற்குச் செல்வது போல இவர்கள் செய்கின்றனர்.

இவர்கள் இங்கு வந்தும் எவ்வாறு கல்வி கற்பிக்கப் போகின்றார்கள்?. நோயாளிகளான இவர்களை ஆசிரியர்களாக வைத்திருக்கக்கூடாது. இவர்களினால் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இவர்களை கட்டாய ஓய்வில் அனுப்புவதே சிறந்த வழியென அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .