2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

பெண்ணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2014 ஜூன் 16 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

யாழ். மறவன்புலோ மேற்கிலுள்ள வீடொன்றில் இருந்து  3 பிள்ளைகளின் தாயான எஸ். ரஞ்சனாதேவி (வயது 46) என்பவர்; திங்கட்கிழமை(16) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுத்திட்டத்தில் இவருக்கு வழங்கப்பட்ட பணத்திற்கு மேலதிகமாக கடன்களை பெற்று குறித் பெண் வீடு கட்டியுள்ளதாகவும், இதன் காரணமாக கடன் தொல்லை இருந்ததாகவும் அயலவர்கள் தெரிவித்ததாகப் பொலிஸார் கூறினர்.

குறித்த பெண்ணின் சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.                                   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .