2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கண்டெடுத்த பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த ஆசிரியை

Kanagaraj   / 2014 ஜூன் 22 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்.பத்தமேனிப் பகுதியிலுள்ள வீதியில் 23ஆயிரத்து 240 ரூபா மற்றும் வெளிநாட்டு பணத்துடன் கிடந்த கைப்பையொன்றினை அச்சுவேலியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (22) தம்மிடம் ஒப்படைத்ததாக அச்சுவேலி பொலிஸ் நிலைய குற்ற ஒழிப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கே.எம்.சி.பிரதீப் செனவிரத்தன தெரிவித்தார்.

அச்சுவேலி பத்தமேனியினைச் சேர்ந்த மஹாதேவன் மருதாலினி (வயது 24) என்பவரே இவ்வாறு கைப்பையை ஒப்படைத்துள்ளார்.

மேற்படி கைப்பை அச்சுவேலி இடைக்காட்டுப் பகுதியினைச் சேர்ந்த ஒருவருடையது எனவும் ஆதாரங்கள் உறுதிப்படுத்தப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பரிசோதகர் தெரிவித்தார்.

'ஆசிரியையின் நேர்மையான செயலினைப் பாராட்டுவதுடன், இவரை முன்மாதிரியாகக் கொண்டு மற்றவர்களும் செயற்படவேண்டும்' என பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .