2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கஞ்சா கடத்தியவர் தடுப்பு காவலில் வைத்து விசாரணை

Super User   / 2014 ஜூன் 22 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.மாதகல் துறைமுகத்தில் கடந்த வியாழக்கிழமை (19) 132 கிலோ கிராம் கஞ்சாவை வைத்திருந்தாத கைது செய்யப்பட்ட நபரை, காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவில் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இளவாலைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.சிந்திக பண்டார ஞாயிற்றுக்கிழமை (22) தெரிவித்தார்.

மேற்படி கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய மற்றய நபரை கைது செய்துள்ளனரா என்பது தொடர்பாக அவரிடம் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேற்படி கஞ்சா கடத்தலுடன் தொடர்புடைய மற்றய நபர் வெளிமாவட்டமொன்றில் பதுங்கியிருப்பதாக புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட நபரை கடந்த வெள்ளிக்கிழமை (20) மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனாலும் இளவாலைப் பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்வதற்கு போதியளவு இடவசதி இல்லாததன்  காரணத்தினால் காங்கேசன்துறை பொலிஸ் பிரிவில் வைத்து குறித்த நபரை விசாரணைக்குட்படுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா ஒரு கோடியே 32 இலட்சம் ரூபா பெறுமதியுடையது என்பதுடன், இதுவே யாழ்ப்பாணத்தில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவில் அதிகூடிய பெறுமதியுடைய கஞ்சா என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .