2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஜாதிக ஹெல உறுமயின் முறைப்பாட்டிற்கு பதில் கடிதம்: சிவஞானம்

Kanagaraj   / 2014 ஜூன் 24 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த்

ஜாதிக ஹெல உறுமய கட்சியால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு விளக்கமளிக்கும் கடிதத்தினை ஆணைக்குழுவிற்கு கடந்த 18ஆம் திகதி அனுப்பியுள்ளதாக வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று (24) தெரிவித்தார்.

வடமாகாண அவைத் தலைவரின் ஏற்பாட்டில் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர் கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட, பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை நீக்கக்கோரும் பிரேரணை தொடர்பிலான பிரதிகள் இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தமிழ் மொழியில் அனுப்பப்பட்டிருந்தது.

இவ்வாறு தமிழில் அனுப்பியமையினால் மும்மொழிக் கொள்கை மீறப்பட்டுள்ளதாகக் கூறி ஜாதிக ஹெல உறுமயக் கட்சி, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தது.

இதனையடுத்து, இது தொடர்பில் விளக்கம் கோரி ஆணைக்குழுவினால் எமக்குக் கடிதமொன்று அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்தக் கடிதம் தொடர்பாக விளக்கமளிக்கும் கடிததத்தினை தான் அனுப்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .