2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வீதி விபத்து விழிப்புணர்வு நாடகம்

Kogilavani   / 2014 ஜூன் 25 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


யாழ்.மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் வீதி விபத்துக்களினால் ஏற்படும் பாதகமான விளைவுகள் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம்  யாழ்.பொது நூலகத்திற்கு முன்னால் புதன்கிழமை (25) நடத்தப்பட்டது.
 
யாழ்.பொஸிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி சமிந்த டி சில்வா தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு நாடக நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதி விபத்துக்களின் பாதகமான விளைவுகள் பற்றி நடித்துக் காட்டினார்கள்.

இதன்போது, வீதி நடைமுறைகள் தொடர்பான விளக்கங்களும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன.

இதில் யாழ்ப்பாணம்  தென்மராட்சி, வலிகாமம் ஆகிய கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 100 பேர் வரையில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஐp.ஏ.சந்திரசிறி, வடமாகாணப் பிரதிப் பொஸிஸ்மா அதிபர் பூஜித nஐயசுந்தர, யாழ் மாவட்ட பிரதிப் பொஸிஸ்மா அதிபர் றொஹான் டயஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .