2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கசிப்புடன் ஒருவர் கைது

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.அச்செழு கொலனிப் பகுதியில் 4 போத்தல்களில் 3 லீற்றர் கசிப்பு வைத்திருந்ததாக கூறப்படும் நபரை புதன்கிழமை (25) இரவு கைது செய்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தினைச் சேர்ந்த இராசன் சுகந்தன் (40) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே அவருடைய வீட்டுக்கு சென்று குறித்த நபரை கைது செய்துள்ளனர்.

இவர் கசிப்பு உற்பத்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், ஏற்கெனவே பலமுறை அவரைக் கைது செய்ய முற்பட்ட வேளை தாப்பிச்சென்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .