2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோக விழிப்புணர்வுப் பேரணி

Kogilavani   / 2014 ஜூன் 26 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன், கி.பகவான்

தென்மராட்சிக் கல்விவலய முறைசாராக் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான விழிப்புணர்வு பேரணி சாவகச்சேரியில் வியாழக்கிழமை (26) இடம்பெற்றது.

சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலிருந்து ஆரம்பமாகிய இந்த விழிப்புணர்வுப் பேரணியானது சாவகச்சேரி பேருந்து தரிப்பிடம் வரை சென்றடைந்தது.

சிறுவர் உலகம் ஒளிபெற அனைத்துக் கரங்களையும் ஒன்றிணைப்போம் என்ற தொனிப்பொருளில் இந்தப் பேரணி நடைபெற்றது.

சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இப்பேரணி நடத்தப்பட்டதாக ஏற்பாட்டாளாகள்; தெரிவித்தனர்.

இந்தப் பேரணியில் வலயக் கல்லி உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .