2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

விவசாய தொகை மதிப்பீடு

Super User   / 2014 ஜூன் 30 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    வி.தபேந்திரன்


இலங்கை தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் விவசாய தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாடு பூராகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மதிப்பீட்டு நடவடிக்கையில் விவசாயச் செய்கைகள், கால்நடைகளின் எண்ணிக்கை மற்றும் பண்படுத்தப்பட்ட நிலங்களின் அளவு என்பன மதிப்பிடவுள்ளன.

இலங்கையிலுள்ள 324 பிரதேச செயலக பிரிவுகள் மற்றும் 53 உதவி அரசாங்க அதிபர் பிரிவுகள் ஆகியவற்றில் இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகளை கிராமஅலுவலர்களே மேற்கொள்ளவுள்ளமையால் அவர்களுக்கு இது தொடர்பில் விளக்கமளிக்கும் செயலமர்வு நாடு பூராகவும் இன்று திங்கட்கிழமை (30) இடம்பெற்று வருகின்றன.

கிராமஅலுவலர்களுக்கான விளக்கங்களை தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். அதன்படி விவசாய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முடிவடையவுள்ளன.

இந்த தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் 10 வருடங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .