2025 ஜூலை 03, வியாழக்கிழமை

குடும்ப அபிவிருத்திக்கான தேசிய கருத்திட்டம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 01 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

சமூக சேவைகள் அமைச்சின் கீழுள்ள சமூக சேவைகள் திணைக்களத்தினால் 'எமது அழகான குடும்பம்' எனும் கருப்பொருளில் குடும்ப அபிவிருத்திக்கான தேசிய கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷக் கோகுல பெர்ணான்டோ இன்று செவ்வாய்க்கிழமை (01) தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சார பிரிவுகளில் கடந்த சில தசாப்பதங்களாக இடம்பெற்று வருகின்ற துரித வேறுபாட்டின் காரணமாக, குடும்ப அலகினுள் பல தீய விளைவுகள் உருவாக்கப்பட்டு, நாட்டினுள் பல சமூகப் பிரச்சனைகள் தலைவிரித்தாடுகின்றன.

இப்பிரச்சனைகளை தணிப்பதற்காகச் சமூக சேவைகள் திணைக்களத்தினால் இந்தத் திட்டம் தேசிய மட்டத்தில் 2015ஆம் ஆண்டிலிருந்து விரிவுபடுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தில் குடும்பத்தில் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவினைப் பலப்படுத்தல், பிள்ளைகள் மூத்தோரினை மதிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்தல், பிள்ளைகள் சமூகத்தில் நற்பிரஜைகளாக நடந்துகொள்ள நடவடிக்கை எடுத்தல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தரவுகள் பிரதேச செயலகங்களிலுள்ள சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஊடாக சேகரிக்கப்பட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .