2025 ஜூலை 03, வியாழக்கிழமை

முகமாலையில் மீட்கப்பட்டது பெண்ணினுடைய எலும்புக்கூடு

Kanagaraj   / 2014 ஜூலை 02 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


யாழ். முகமாலைப் பகுதியில் இன்று (02) மீட்கப்பட்ட எலும்புக்கூட்டின் அருகிலுள்ள ஆடைகளை வைத்து அது பெண்ணினுடைய எலும்புக்கூடு என உறுதிப்படுத்தியுள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த எலும்புக் கூட்டிற்கு அருகில் விடுதலைப் புலிகளின் மகளிர் படையணியினர் அணியும் ஆடைகள், மற்றும் தொப்பி ஆகியன கண்டெடுக்கப்பட்டதாகவும் அதனை வைத்தே பெண்ணிணுடைய எலும்புக்கூடாக இருக்கலாம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹலோரெஸ்ட் நிறுவனத்தின் மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள், கைவிடப்பட்ட காவலரண் ஒன்றில் பணியினை மேற்கொள்ளும் போதே மேற்படி எலும்புக்கூடு இருப்பதை அவதானித்து பளை பொலிஸாரிற்கு அறிவித்துள்ளனர் தொடர்ந்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் குறித்த எலும்புக்கூட்டினை மீட்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .