2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மனோன்மணி சனசமூக நிலையக் கட்டிடங்கள் திறப்பு

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


யாழ்., கொக்குவில் மனோன்மணி சனசமூக நிலையத்தில் 9.1 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட சனசமூக நிலைய கட்டிடம் மற்றும் முன்பள்ளிக் கட்டிடம் ஆகியவை நேற்று புதன்கிழமை (16) திறந்து வைக்கப்பட்டன.

யாழ்.மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகத்தினால் இந்த கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
யாழ். கொக்குவில் நந்தாவில் அம்மன் ஆலயச் சூழலில் அமையப்பெற்றிருந்த மேற்படி சனசமூக நிலையத்தின் கட்டிடங்கள், கடந்த 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் அனர்த்தத்தின் போது முற்றாக இடிந்து சேதமாகின.

இதனைத் தொடர்ந்து தற்போது மக்களின் முழுப்பங்களிப்புடன் அமைக்கப்பட்ட இக்கட்டிடத்தில் சனசமூக நிலையம், முன்பள்ளி, பொதுக்கூட்ட மண்டபம் ஆகியன ஒருங்கே அமையப்பெற்றுள்ளன.

இந்நிகழ்வில் நல்லூர் பிரதேச செயலர் பா.செந்தில்நந்தனன், நல்லூர் பிரதேச சபை தவிசாளர் இ.வசந்தகுமார், சபையின் எதிர்கட்சி தலைவர் அ.இராவிந்திரதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .