2025 ஜூலை 05, சனிக்கிழமை

த.தே.கூ, வடமாகாண சபைக்கு எதிராக துண்டுப்பிரசுரம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன்


வடமாகாண சபைக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் பல இடங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

'எங்கள் இனத்தினைக் கொன்று குவித்த மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவினை ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரித்த கூட்டமைப்பு ஓய்வுநிலை இராணுவ அதிகாரியை மீளவும் ஆளுநராக்கியதை எதிர்க்க என்ன அருகதை இருக்கின்றது' என்ற தொனிப் பொருளில் அந்தத் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது.

இருந்தும், குறித்த துண்டுப்பிரசுரம் யாரால் ஒட்டப்பட்டமை தொடர்பில் உரிமை கோரப்பட்டிருக்கவில்லை.

'குறை காண்பதை நிறுத்து. முடியாவிட்டால் இராஜினாமா செய்!' என்ற முடிவுரையுடன் குறித்த துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .