2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது

Menaka Mookandi   / 2014 ஜூலை 17 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.புத்தூர்ச் சந்திப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (17) அதிகாலை, சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய சாவகச்சேரியினைச் சேர்ந்த நபரை கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தூர்ச் சந்தியில் பைகளுடன் நின்றிருந்த மேற்படி நபரை, ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் விசாரணை செய்த போது, மேற்படி நபர் தனது அடையாளத்தினை உறுதிப்படுத்தத் தவறியிருந்தார்.

இதனால் மேற்படி நபரைக் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இவரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக அச்சுவேலி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .