2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மூன்று பொதுக்கிணறுகள் அமைப்பதற்கு நிதி

Menaka Mookandi   / 2014 ஜூலை 23 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வலி.கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலகத்திற்குட்பட்ட இடைக்காடு அக்கரைப் பகுதிக்கு 3 பொதுக்கிணறுகள் அமைப்பதற்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 3 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி பகுதியில் 2013ஆம் ஆண்டு ஜுலை மாதம் மீள்குடியேறுவதற்கு அனுமதியளிக்கப்பட்ட பின்னர், அப்பகுதியில் 50 குடும்பங்கள் வரையில் மீளக்குடியேறியுள்ளனர். அதனைவிட மேலும் 46 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்கு பதிவுகளை மேற்கொண்டுள்ளனர்.

இதனால், அப்பகுதியின் நீர்த் தேவைக்கு பொதுக்கிணறுகள் அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனையடுத்து, மீள்குடியேற்ற அமைச்சினால் பொதுக்கிணறுகள் அமைப்பதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளன.

அந்நிதியினைக் கொண்டு கிணறுகள் அமைக்கும் பணிகள் இம்மாதத் தொடக்கத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .