2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உள்ளூராட்சி மன்றங்களின் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2014 ஜூலை 24 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


வடமாகாண உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர் செயலாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் யாழ். பொதுநூலகத்தில் இன்று வியாழக்கிழமை (24) காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பமாகியது.

உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும், உள்ளூராட்சி மன்றங்களினால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது.

இந்தக் கலந்துரையாடலில் வடமாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர், செயலாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இருந்தும் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா கலந்துகொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .