2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பணப்பையை திருட முற்பட்ட சிறுவன் கைது

Gavitha   / 2014 ஜூலை 31 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் பயணி ஒருவரின் காற்சட்டையில் வைக்கப்பட்டிருந்த பணப்பையை திருட முற்பட்ட சிறுவனை புதன்கிழமை (30) கைது செய்ததாக யாழ்.பொலிஸார் இன்று வியாழ்க்கிழமை (31) தெரிவித்தனர்.

காரங்குளத்தைச் சேர்ந்த 8 வயதுச் சிறுவன் ஒருவனே மேற்படி கைது செய்யப்பட்டுள்ளான்.

தான் வவுனியாவிலிருந்து தனது பாட்டி வீட்டிற்கு வந்ததாகவும் யாழ். பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த இளைஞன் ஒருவன் தன்னை திருடுவதற்கு தூண்டியதாகவும் கைது செய்யப்பட்ட சிறுவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளான்.

கைது செய்யப்பட்ட சிறுவனது பெற்றோரை யாழ். பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை, வவுனியா பொலிஸார் மூலம் யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவனை தவறான முறையில் வழிநடத்திய இளைஞன் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .