2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அமைச்சரவையில் வட மாகாண முதலமைச்சர் பங்கெடுத்தால் மாகாண அபிவிருத்தி முன்னேற்றமடையும்: டக்ளஸ்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


சேதமடைந்த வீதிகளின் புனரமைப்பு பணிகள் சரியான முறையிலும் ஸ்திரத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதுடன் அபிவிருத்தியையும் சமூக அக்கறையையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று (01) தெரிவித்தார்.

யாழில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் நிலவிய யுத்த சூழலால் எமது பகுதிகளிலுள்ள வீதிகளும் பெரும் சேதங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் உள்ளாகியிருந்தன.

யுத்தம் நிறைவுக்கு வந்த நிலையில் யாழ். மாவட்டம் உள்ளிட்ட வடக்கின் பிரதான வீதிகள் காபெற் இடப்பட்டு சிறப்பான முறையில் அரசினால் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் எதிர்காலத்தில் தொடரப்படவுள்ள ஏனைய வீதிகளின் புனரமைப்பு பணிகள் சிறப்பான முறையிலும் ஸ்திரத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமன்றி எமது பகுதியின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, உரியவர்கள் சமூக அக்கறையுடன் பணியாற்ற வேண்டும்.

இதனிடையே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அமைச்சரவையில் பங்குபற்றுமாறு வட மாகாண முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும் அதனை வட மாகாண முதலமைச்சர் நிராகரித்திருந்ததையும் சுட்டிக்காட்டியதுடன் அவ்வாறு முதலமைச்சர் அமைச்சரவையில் பங்கெடுக்கும் பட்சத்தில் இப்பகுதியின் அபிவிருத்திகளை மேலும் அரசுடன் இணைந்து முன்னெடுக்க முடியுமென்றும் தெரிவித்தார்.

இரண்டாம் உலகின் போரின் போது ஜேர்மனி மற்றும் ஜப்பான் நாடுகள் மீது அமெரிக்கா குண்டுகளை வீசி அழித்திருந்த போதிலும் இரண்டாம் தலைமுறை அமெரிக்காவுடன் கைகுலுங்கியதன் மூலமே ஜேர்மனியும் ஜப்பானும் தற்போது உயர்ந்த நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதேபோன்று நாமும் அரசுடன் இணைந்து அபிவிருத்திகளை முன்னெடுக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, இரணைமடு குடிநீர் திட்டம் தொடர்பில் அவர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் சிலர் தமது சுயலாப அரசியலுக்காக அதை தடுத்து வருகின்றனர் என்றும் தெளிவுபடுத்தினார்.

அத்துடன் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் ஏற்கெனவே மாவட்டத்தில் நிறைவு செய்யப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட அமைச்சர், யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அண்மைய நாட்களில் பூர்த்தி செய்யப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் துறைசார்ந்தோருடன் கேட்டறிந்து கொண்டார்.

யாழ்;. மாவட்டத்தில் ஏறn;கனவே புனரமைக்கப்பட வேண்டிய 60 கிலோ மீற்றர் வீதிகளில் 30 கிலோ மீற்றர் வீதிகளுக்கான புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் எஞ்சிய 30 கிலோ மீற்றர் வீதிகளின் புனரமைப்புப் பணிகளும் 2015 ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்படவுள்ளன.

இதனிடையே யாழ்.மாவட்டத்தில் புனரமைக்கப்பட வேண்டியுள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 210 கிலோமீற்றர் வீதிகளின் புனரமைப்பு பணிகளுக்கு 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுத் தருவதற்கு உள்ளூராட்சி மாகாணசபைகள் அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம்; கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன்போது வடமாகாண பொறியியல்துறையின் பிரதிப் பிரதம செயலாளர் இராஜேந்திரன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண திட்டப் பணிப்பாளர் மரியதாஸ், மாகாணப் பணிப்பாளர் சிவராஜலிங்கம், யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, மாநகர சபை ஆணையாளர் பிரணவநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .