2025 ஜூலை 07, திங்கட்கிழமை

இலவச மருத்துவ முகாம்

George   / 2014 ஓகஸ்ட் 03 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-
ற.றஜீவன்


யாழ். தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் மணியம் கணபதிப்பிள்ளையின் 7 ஆம் ஆண்டு நினைவாக, மாணவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலவச மருத்துவமுகாம் மற்றும் 5 ஆம் தர மாணவர்களிற்கான கல்விக் கருத்தரங்கு ஆகியன ஞாயிற்றுக்கிழமை (03) வித்தியாலயத்தில் நடைபெற்றன.

இலவச மருத்துவ முகாமில் கண் வைத்தியம் மற்றும் பொது வைத்தியம் ஆகியவற்றிற்கான சிகிச்சைகளை யாழ்ப்பாணத்தினைச் சேர்ந்த வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் வழங்கினார்கள். இதில் 100 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்களைப் பெற்றனர்.

5 ஆம் தர பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கருத்தரங்கில் 360 மாணவர்கள் பங்குபற்றியிருந்ததுடன், அவர்களுக்கு யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான ஆசிரியர்கள் கருத்துரைகளை வழங்கினார்கள்.

மேற்படி அதிபரின் நினைவாக வருடாவருடம் விளையாட்டு விழாவாக நடத்தி வந்ததாகவும், இம்முறை அதில் மாற்றங்கொண்டு வரப்பட்டு, மருத்துவ முகாம் மற்றும் கருத்தரங்குகள் ஆகியன நடத்தப்பட்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .