2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மணல் கொண்டுசென்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2014 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


- செல்வநாயகம் கபிலன்


யாழ். வல்லை வீதி வழியாக அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்திலும் கன்டர் ரக வாகனத்திலும் மணல்   கொண்டுசென்றதாகக் கூறப்படும் இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) இரவு கைதுசெய்ததாக அச்சுவேலி பொலிஸார் திங்கட்கிழமை (04) தெரிவித்தனர்.

கோவில் ஒன்றின் வெளிவீதிக்கு மணல் போடுவதற்காக வல்லைப் பகுதியிலுள்ள தரிசு நிலத்திலிருந்து அனுமதியின்றி மண் வெட்டிச் சென்றுகொண்டிருந்தபோது, ஆவரங்கால் பகுதியைச்; சேர்ந்த 27 வயதுடைய ஒருவரையும் அச்சுவேலியைச் சேர்ந்த 21 வயதுடைய ஒருவரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவர்களின் வாகனங்கள் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இந்தச் சந்தேக நபர்களை இன்று திங்கட்கிழமை (04) நீதிமன்றத்தில் ஆஜர்;படுத்தவுள்ளதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .